திருமணமானவரை திருமணம் செய்ய மாட்டேன்

ஸ்ரீதேவியை ரொம்ப பிடிக்கும், ஆனால் திருமண விஷயத்தில் மட்டும்
அவ‌ர் வழியை பின்பற்ற மாட்டேன் என்று கூறியுள்ளார் நடிகை சமந்தா.


பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சமந்தா. வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். தெலுங்கிலும் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார்.

இவர் நடித்துள்ள நான் ஈ படம் இம்மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. இதுதவிர மணிரத்னத்தின் கடல், கவுத‌ம் மேனின் நீ தானே என் பொன்வசந்தாம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சினிமாவில் தன்னுடைய வளர்ச்சி குறித்து சமந்தா கூறியுள்ளதாவது, சினிமாவில் ஸ்ரீதேவி தான் என்னுடைய ரோல் மாடல்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி என்று எல்லா மொழிகளிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். தமிழ், தெலுங்கில் நடித்து வந்த நான் இப்போது இந்தி சினிமாவிலும் கால் பதித்து உள்ளேன்.

ஸ்ரீதேவியை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் திருமண விஷயத்தில் மட்டும் நான் அவரை பின்பற்ற மாட்டேன். அதாவது ஏற்கனவே திருமணமானவரை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi

Artikel திருமணமானவரை திருமணம் செய்ய மாட்டேன் ini dipublish oleh NEW STAR pada hari . Semoga artikel ini dapat bermanfaat.Terimakasih atas kunjungan Anda silahkan tinggalkan komentar.sudah ada 0 komentar: di postingan திருமணமானவரை திருமணம் செய்ய மாட்டேன்