'சமர்' படத்தினைத் தொடர்ந்து விஷால் நடித்து வரும் படம்
'எம்.ஜி.ஆர்.' இப்படத்தினை சுந்தர்.சி இயக்கி வருகிறார்.
இப்படம் தொடங்கும் போதே நாயகி வேடத்தில் நடிக்கப் போவது யார் என்பது குறித்து பெரும் குழப்பம் இருந்தது. முதலில் ஹன்சிகாவிடம் பேசி வந்தார்கள். அவரோ தேதிகள் இல்லை என்று விலகி விட்டார்.அவரைத் தொடர்ந்து கார்த்திகா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது இவரும் இப்படத்தில் இருந்து விலகி விட்டார்.
முதலில் விஷால் மூன்று வேடங்களில் நடிப்பது போல கதையை தயார் செய்து இருந்தாராம் சுந்தர்.சி. ஆனால் தற்போது விஷால் ஒரு வேடத்தில் நடிப்பது போல கதையை மாற்றி அமைத்து விட்டாராம்.இக்கதையினை கேட்ட கார்த்திகா, படத்தில் கிளாமருக்காக மட்டுமே தன்னை பயன்படுத்த இருக்கிறார்கள் என்று கருதி, இப்படத்தில் இருந்து விலகி விட்டாராம்.
தற்போது நாயகி வேடத்தில் 'போடா போடி' நாயகி வரலெட்சுமி சரத்குமார் நடிக்கலாம் என தெரிகிறது.
'கொசுறு' கபாலி : " ஹீரோயின்களுக்கு நடிக்க ஸ்கோப் குடுங்கப்பு! "