மலையாளத் திரையுலகில் இப்போது இதுதான் பரபரப்பான பேச்சாக உள்ளது.
ஹீரோயின் ஒருவர் குத்துப் பாட்டுக்கு ஆடுவது என்பது அங்கு ரொம்பப் புதுசான விஷயம். ஆனால் பத்மப்பிரியா அதை உடைத்துள்ளார். பேச்சலர்ஸ் பார்ட்டி படத்தில் அவர் ஒரு அருமையான குத்துப் பாட்டுக்கு டான்ஸ் போடுகிறாராம்.
பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் குத்துப் பாட்டுக்களுக்கு நாயகிகளே நடனமாடுவது என்பது சாதாரண விஷயம்தான். ஆனால் மலையாளத்தில் மட்டும் அப்படி ஒரு சம்பவம் இதுவரை நடைபெற்றதில்லை. ஆனால் முதல் முறையாக பத்மப்ரியா ஒரு படத்தில் குத்துப் பாட்டுக்கு கவர்ச்சிகரமாக ஆடியுள்ளாராம்.
பேச்சலர்ஸ் பார்ட்டி என்ற படத்தில்தான் இந்தக் குத்தாட்டத்தை ஆடியுள்ளார் பத்மப்ரியா.
இதுகுறித்து அவர் கூறுகையில், குத்துப்பாட்டுக்கு நான் எதிரானவள் கிடையாது. அதை ஒருபோதும் வெறுத்ததில்லை. அதுவும் சினிமாவில் ஒரு அங்கம்தான்.
இயக்குநர் அமல் நீரத்திடம் நான் ஒரு முறை கூறியிருந்தேன். ஏன் குத்துப்பாட்டுக்கெல்லாம் எங்களைப் போன்றவர்களை கூப்பிடுவதில்லை என்று. ஆனால் அதை அவர் சீரியஸாக எடுத்துக் கொண்டு தனது அடுத்த படத்திலேயே கூப்பிட்டது வியப்பாகி விட்டது.
எனக்கு டான்ஸ் என்றால் பிடிக்கும். அதிலும் குத்துப்பாட்டு என்றால் ஜாலியாக இருக்கும். இப்போது நானே ஆடப் போவது வித்தியாசமாக உள்ளது, ரொம்ப எதிர்பார்ப்பு உள்ளது. ஒன்றரைநாளிலேயே இந்தப் பாட்டைப் படமாக்கி விட்டனர். படத்தின் கதைக்கும், இந்தப் பாட்டுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆனால் படத்தின் அத்தனை கேரக்டர்களும் சங்கமிக்கும் இடத்தில் இந்தப் பாடல் வருவதாக இயக்குநர் கூறியுள்ளார் என்றார் பத்மப்ரியா.
‘கப்ப கப்ப’ என்று ஆரம்பிக்கிறதாம் இந்தப் பாடல்… பலே!