குண்டாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. ஏனெனில் இதுதான் உண்மை என்று கூறியிருக்கிறார்
அழகு அம்மா ஐஸ்வர்யா. கேன்ஸ் திரைப்பட விழாவில் கடந்த 10 ஆண்டுகளாக பங்கெடுத்து வரும் ஐஸ்வர்யா குழந்தை பெற்ற பின்னர் இந்த ஆண்டு பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் ரசிகர்களை ஏமாற்றாமல் தனது குழந்தையுடன் பங்கேற்றார் ஐஸ்வர்யா. தாய்மையின் பூரிப்பு முகத்தில் தெரிய ஃபிப்டி கேஜி தாஜ்மகால் சற்றே எடை கூடி 60 கேஜியாக மாறியிருந்தார். ஐஸ்வர்யா குண்டானதைப் பற்றிதான் மீடியா உலகில் பேச்சாக இருந்தது.
ஆனால் ஐஸ்வர்யா அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், இதுதான் உண்மை. நான் ஒரு குழந்தையின் அம்மாவாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறேன். என் உடம்பை குறைக்க வேண்டும் என்பதற்காக நான் டயட்டில் எல்லாம் இல்லை.
எனக்கு பிடித்த உணவை நன்றாக சாப்பிடுகிறேன் அப்பொழுது தானே குழந்தையை நன்றாக கவனிக்க முடியும். என் மீது அக்கறை எடுத்துக் கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி என்று கூறிய ஐஸ்வர்யா கடவுள் ஆசீர்வதித்தால் அடுத்த குழந்தைக்கு தாயாராவேன் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் நிரந்தர அழகிக்கு அடுத்து பிறக்கப்போவது ஆணா, பெண்ணா இப்பவே ஜோசியம் சொல்ல ஆரம்பிங்கப்பா !