நமீதா பரபரப்பு பேட்டி!

நான் அரசியல்வாதியாக இருந்தால் சா‌லை விதிகளை மீறுபவர்களை கடுமையாக
 தண்டிப்பேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் இந்திய மலேசிய தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் பிங் ஆட்ஸ் இணைந்து ஜூன் 22, 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் மோட்டோ ஷோ 2012 என்கிற ஆட்டோபொபைல் கண்காட்சியை நடத்தவிருக்கிறது.

இந்த கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. வாகனங்களைச் சந்தைப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் போக்குவரத்து விதிகளை முழுமையாகக் கடைபிடித்து விபத்தில்லாமல் வாகனங்களை ஓட்டுவது சம்பந்தமான விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளனர்.

அதற்காக மோட்டோ ஷோ 2012 நடைபெறும் முன்பு, ஜூன் 10 காலை சென்னை பெசன்ட் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பங்குபெறும் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற உள்ளது. இதனை நடிகர் பரத்தும், நடிகை நமீதாவும் இதை துவக்கி வைக்கின்றனர். இதற்கான அறிமுக கூட்டம் இரு தினங்களுக்கு முன்னர் நடந்தது.

இதில் பங்கேற்ற நடிகை நமீதா பேசியதாவது, கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு முன்னர் ஆந்திராவில் ஒரு படப்பிடிப்பு சென்று திரும்பும்போது மிகப்பெரிய விபத்தில் இருந்து உயர் தப்பினேன். அதற்கு முக்கிய காரணம், நான் காரில் பயணிக்கும்போது சீட்பெல்ட் அணிய மறந்ததில்லை. ஒரு சிலரது கவனக்குறைவால் போக்குவரத்து விதி மீறலால் பலரும் பாதிக்கப்டுகின்றனர்.

இதனால் அவர்களது குடும்பம், நண்பர்கள் உள்ளிட்டவர்களும் கஷ்டப்படுகிறார்கள். போக்குவரத்து விதிகள் உடைப்பதற்கே என்கிற மன நிலை நம் நாட்டில் இருக்கிறது.. அது மாறவேண்டும்... மிகவும் வெப்பமான சீதோஷ்ண நிலையில் ஹெல்மெட் போடுவது கஷ்டமாக இருக்கும் என்று நினைப்பவர்கள் தலைமுடியினை மிகவும் ஷாட்டாக வெட்டிக் கொள்ளலாமே!... “ என்று மிகவும் உரிமையுடன் ஆதங்கப்பட்ட நமீதா சுற்றுப்புறங்களை மாசுபடுத்துபவர்களையும் ஒரு பிடி பிடித்தார்.

பொது இடங்களில் இயற்கை உபாதைகளை தீர்த்துக் கொள்ளக்கூடாது... எச்சில் துப்புதல் மற்றும் குப்பைகளைப் போடுதல் கூடாது என்று வலியுறுத்திய நமீதா, “ நான் அரசியல் வாதியாக இருந்தால் அப்படிச் செய்பவர்களுக்கு 5000 ,10000 என்று மிகக்கடினமான அபராதம் விதிப்பேன்..” என்றார். விரைவில் அதி விரைவு பைக்கான ஹார்லே டேவிட்சன் வாங்க உள்ளார் நமீதா என்பது கூடுதல் தகவல்.

நடிகர் பரத் பேசியபோது, நள்ளிரவு நேரம் என்றாலும் போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என்று எனது டிரைவருக்கு உத்தரவு போட்டிருக்கிறேன். நானும் அதனை முழுமையாகப் பின்பற்றுகிறேன். போக்குவரத்து விதிகளை மீறி நம்மால் யாருக்கும் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடக்கூடாது. போக்குவரத்து விதிகளை ஒரு சிலர் மட்டும் பின்பற்றினால் போதாது. நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

இந்த மாதிரி விழிப்புணர்வு சம்பந்தமான விழாக்களுக்குக் கூப்பிடும் போது உடனே ஒத்துக் கொள்கிறேன். அவர்களை பலமுறை அழைக்க வைத்து அலைக்கழிப்பதில்லை. போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பது நமது கடமை என்று பேசினார் நடிகர் பரத் மேலும் பரத் இதுவரை பொது இடங்களில் ஒரு காகிதத்தைக் கூட வீசினதில்லை. சிறிய குப்பைகள் ஆனாலும் குப்பை சேகரிக்கும் இடங்களைத் தேடிச் சென்று கொட்டும் வழக்கமுடையவராயிருக்கிறாராம்.

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi

Artikel நமீதா பரபரப்பு பேட்டி! ini dipublish oleh NEW STAR pada hari . Semoga artikel ini dapat bermanfaat.Terimakasih atas kunjungan Anda silahkan tinggalkan komentar.sudah ada 0 komentar: di postingan நமீதா பரபரப்பு பேட்டி!