இந்திய சினிமா நடிகர்களின் ஒரே கனவு மணிரத்தின் திரைப்படத்தில்
ஒரு சிறு வேடத்திலாவது நடிக்க வேண்டும் என்பது. அனால் நடிகை சமந்தாவிற்கு கிடைத்த கதாநாயகி வாய்ப்பையே வேண்டாம் என்று சொல்லி மணிரத்தினம் இயக்கிக் கொண்டு இருக்கும் கடல் திரைப்படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் கோடம்பாக்கமே ஆச்சரியப்பட்டுப் போயுள்ளது.
எதனால் சமந்தா இத்திரைப்படத்தில் இருந்து விலகினார் என்று கோடம்பாக்கத்தில் உள்ள எல்லா நட்சத்திரங்களுமே கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.
நடிகர் கார்த்திகின் மகன் கெளதமை நாயகனாக அறிமுகப்படுத்தி இந்தப்படத்தை மணிரத்னம் இயக்கிக் கொண்டு இருக்கிறார்.ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தென் தமிழகத்தின் கடற்கரையோர கிராமங்களில் தீவிரமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
மணிரத்னத்தைப் பொருத்தவரை இந்தப் படம் அவருக்கு பெரிய சவால். காரணம், தொடர்ந்து அவரது படங்கள் பாக்ஸ் ஆபீசிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அவரது சமீபத்திய வெளியீடான ராவண், தமிழ், தெலுங்கு, இந்தி மூன்றிலுமே படுதோல்வி கண்டது.
எனவே பார்த்துப் பார்த்து கடல் படத்தை உருவாக்கி வருகிறார்.
சமந்தா இந்தப் படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டதும், தனது வாழ்க்கையில் இந்தப் படம் மறக்கமுடியாததாக அமையும் என்று சந்தோஷப்பட்டார்.
ஆனால் இப்போது திடீரென்று படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சமந்தா அறிவித்துள்ளார். கவனிக்க… மணிரத்னம் நீக்கவில்லை… சமந்தாவே விலகிக் கொண்டதாக அறிவித்துள்ளார்.
தமிழில் இனிமேல்தான் சமந்தாவுக்கு வெற்றிப் படம் அமைய வேண்டும். இந்த சூழலில் பெரிய வாய்ப்பு ஒன்றிலிருந்து தானாகவே விலகிக் கொண்டிருக்கிறாரே… என்னவாக இருக்கும்? என்று பேச ஆரம்பித்துள்ளது கோடம்பாக்கம்…
இப்போதைக்கு, நீதானே என் பொன்வசந்தம், ஷங்கர் படம் மற்றும் கார்த்தியுடன் பிரியாணி ஆகியவை சமந்தாவின் கைவசம் உள்ளன.