பில்லா 2 விமர்சனம்

மிகுந்த எதிர்பார்புக்களுக்கு மத்தியில் வெளியான திரைப்படம். 2500 திரை அரங்குகளில் திரையிட பட்டிருகிறது. அதுவும் இந்தியாவின் முதல் “பிரிகுவல்” திரைப்படம். இருந்தாலும் பில்லா என்ற கதாபாத்திரம் ரசிகர்களுக்கு புதிது அல்ல. ஆனால், இது வரைக்கும் பில்லா என்ற மரத்தை காட்டிய திரைப்படங்களில் இருந்து விலகி அதன் வேரை நோக்கிய பயணம் தான் இந்த பில்லா 2 .

இந்த திரைப்படத்தின் முதல் பாகம் தமிழகத்தின் கடலோரத்திலும் பின்பு கோவா நோக்கியும் நகர்கிறது. படத்தின் ஆரம்பத்தில் அதிரடியாக களமிறக்க படுகிறார் அஜித்குமார். இரா.முருகன் மற்றும் முஹம்மத் சபார் ஆகியோரின் வசங்கள் படத்திற்கு ஒரு பெரிய பிளஸ். பஞ்ச் வசங்களையும் ஒரு அர்த்தத்துடன் எழுதி இருக்கிறார்கள். உதாரணமாக ” நான் அகதி தான், அனாதை இல்லை”, “மட்டவனோட பயம் நம்மளோட பலம்” போன்ற வசனங்களை குறிப்பிடலாம். இப்பிடியான வசனங்கள் நிச்சயமாக தல ரசிகர்களை குஷி படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இரண்டாம் பாதியில் ஏதோ தவற விட பட்டது போல் உணர்வு. இரண்டு கதாநாயகிகள் என்று பேருக்கு இருந்தாலும் அவர்கள் கௌரவ வேடத்தில் வந்து போவதை போல் போகின்றனர் என்பதே உண்மை. எதிர்பார்த்ததை போல பார்வதி ஓமனகுட்டனின் கதாபாத்திரம் அமையவில்லை. புருணா பிகினி உடன் வந்து போகின்றார்.

வில்லன்களான சுதன்ஷு மற்றும் வித்யுத் தங்கள் வேலையே கச்சிதமாக செய்கின்றனர். வித்யுத் அதிரடி அக்ஸ்சன் காட்டியும் சுதன்ஷு கூலான வில்லனாகவும் சித்தரிக்க பட்டு உள்ளனர். இளவரசு முதல் பாதியில் கலக்கினாலும் இரண்டாம் பாதியில் காட்சியின் ஓட்டத்தால் அவர் தவற விடபடுகிறார்.

இந்த படம் அஜித் ரசிகர்களுக்கவே எடுக்க பட்டது. முதல் பாதியில் தல வித்தியாசமான வேடத்தில் தெரிந்தாலும் இரண்டாம் பாதியில் தனது வழமையான பாணிக்கு வந்து விடுகிறார். சண்டை காட்சிகளில் கோரமான பார்வையுடன் வளம் வருவது தலயின் மிக பெரிய பிளஸ். ஏற்கனவே எல்லோரும் கெலிகோப்ட்டர் காட்சியை நிறைய எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்த சண்டை மூலம் ஏற்படுத்தபட்ட பட்ட தாக்கம் எதிர் பார்த்த அளவுக்கு இல்லை.

சண்டை காட்சிகள் மூன்று பேரினால் கவனிக்க பட்டு உள்ளது. வேகமாகவும் கோரமாகவும் சண்டைக்காட்சிகள் அமைக்க பட்டுள்ளது. படத்திற்கு “A ” சான்றிதழ் குடுக்க பட்டது சரியே. துப்பாக்கி வேட்டுக்களும் குண்டு வெடிப்புக்களும் வேகத்தை அதிகரிக்கின்றன. ஆனால், இதன் தாக்கமும் பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

சுரேஷ் அர்ஸ் என்னும் கொஞ்சம் கத்தரித்து இருக்கலாம். காங்ஸ்டார் பாடல் படத்தில் முடிவ்வில் வருவது ஏமாற்றமே.

படத்துக்கு மிக பெரிய பிளஸ் ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு. மிக பிரமாண்டமாக அமைக்க பட்டு உள்ளது.

சுருக்கமாக சொன்னால், பில்லா 2 அஜித்தின் தீவிர ரசிகர்களுக்கு மட்டுமே உருவாக பட்டது போல் அமைக்க பட்டுள்ளது. எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும்

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi

Artikel பில்லா 2 விமர்சனம் ini dipublish oleh NEW STAR pada hari . Semoga artikel ini dapat bermanfaat.Terimakasih atas kunjungan Anda silahkan tinggalkan komentar.sudah ada 0 komentar: di postingan பில்லா 2 விமர்சனம்