தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பை மதித்து இலங்கை தலைநகர் கொழும்பில்
இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் திட்டத்தை ரத்து செய்தார் பாடகர் ஹரிஹரன்.
இலங்கைக்கு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக இன்று சனிக்கிழமை பாடகர் ஹரிகரன் செல்வதாக இருந்தார்.
இதனை அறிந்ததும் உலகம் முழுவதும் உள்ள ஈழ ஆதரவாளர்களிடமிருந்தும், தமிழகத்தில் இருந்தும் பலத்த எதிர்ப்புக் குரல் எழுந்தது.
கொட்டும் மழையிலும் அவரது மும்பை வீட்டை தமிழ் உணர்வாளர்கள் முற்றுகையிட்டு, தமிழர்களுக்குப் பிடித்த பாடகரான ஹரிஹரன், தமிழர் விரோத நாட்டுக்கு பாடச் செல்லக் கூடாது என்று கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து ஹரிஹரன் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'எனது இசை உலகம் முழுவதும் அமைதியையும், அன்பையும் பரப்பி வருகிறது. இதில், ஏதாவது ஒரு விதத்தில் எனது ரசிகர்கள் மனது பாதிக்கப்படுமானால் இசையின் நோக்கத்திற்கு இழப்பு ஏற்பட்டுவிடும். அதனால்தான் எனது இலங்கை பயணத்தை ரத்து செய்துவிட்டேன்,' என்று கூறியுள்ளார்.