கவர்ச்சி காட்ட வேண்டுமென நிர்ப்பந்தம் குற்றச்சாட்டும் பூமிகா!

நடிகை பூமிகா கடைசியாக நடித்த படம் ‘சில்லுன்னு ஒரு காதல்’. கடந்த 2007-ல் யோகா மாஸ்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு தற்காலிக முழுக்கு போட்டார். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாளத்தில் ‘ஏப்ரல் பூல்’ ‘ரத்ரிமளா’ ஆகிய படங்களில் நடிக்கிறார். தெலுங்கிலும் நடித்து வருகிறார்.


இந்நிலையில் பூமிகா அளித்த பேட்டி வருமாறு:-

திருமணத்துக்கு பிறகு நிறைய படவாய்ப்புகள் வந்தன. ஆனால் நான் நடிக்கவில்லை. தற்போது மீண்டும் திரையுலகுக்கு வந்துள்ளேன். மலையாளத்தில் ‘ஏப்ரல் பூல்’ படத்தில் நடிக்கிறேன். நிறைய படங்களில் நடிப்பதைவிட நல்ல கதையம்சமும் கேரக்டரும் அமையும் படத்தில் நடிக்கலாம் என்று இருக்கிறேன்.

ஆனால் கதாநாயகர்களை மையப்படுத்தியே கதைகளை உருவாக்குகின்றனர். அவர்களுக்குதான் முக்கியத்துவம் தரப்படுகிறது. கதாநாயகிகளை கவர்ச்சி காட்டும்படி நிர்ப்பந்திக்கிறார்கள். நீச்சல் உடையில் நடிக்கும்படி நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆனால் கதாநாயகர்கள் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் நடித்து வருகிறார்கள்.

இவ்வாறு பூமிகா கூறினார்.

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi