பெண்களின் கனவு நாயகன் சூர்யாவின் பிறந்த நாள்!

ஒவ்வொருவரிற்கும் ஒவ்வொரு நாயகன் இல்லாமல் இல்லை. நடை, உடை, ஸ்டைல்என அனைத்திலும் இளையவர்களை குறிப்பாக இளம் பெண்களை கவர்வதிலே சூர்யாவுக்கு நிகர் எவருமில்லை. அச்சொட்டான நடிப்பும், ஆடம்பரமிலாத்தன்மையும் சூர்யாவிலே ரொம்ப பிடித்தவை.



சூர்யா அவதாரம்:


நடிகர், எழுத்தாளர் ,ஓவியர் சொற்பொழிவாளர் எனப்பல பரிணாமங்களைப் பெற்ற சிவகுமாருக்கும் , லக்ஷ்மி அம்மையாருக்கும் சென்னையிலே 1975 ஜூலை 23ந் திகதி மகனாக பிறந்த சரவணன் தான் இந்த சூர்யா.


சென்னை லோயலாக் கல்லூரியில் வணிகத்துறைப்பட்டம் பெற்ற சரவணன் சினிமாவிற்காக தனது பெயரைசூர்யாவாக மாற்றினார்.


சூர்யாவின் முதல் படம்:


வசந்த் இயக்கி மணிரத்னம் தயாரித்த நேருக்கு நேர் என்னும் திரைப்படத்தில் 1997ல் சினிமாவுக்கு அறிமுகமான சூர்யா 24 படங்களில் கதாநாயகனாக வலம் வந்துள்ளார்


திருமண வாழ்க்கை:"பூவெல்லாம் கேட்டுப்பார்", முதல் "காக்க காக்க", "சில்லுன்னு ஒரு காதல்", "பேரழகன்" என ஏழு படங்களில் தன்னுடன் இணைந்து நடித்த ஜோதிகாவை 11.11.2006 அன்று காதல் திருமணம் புரிந்தார். தியா, தேவ் என இரு குழந்தைகளின் தந்தையானார்.


முதல் விருது:


2001ல் பாலாவின் இயக்கத்தில் வந்த “நந்தா” சூர்யாவின் சினிமா வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனை. ஒரு சிறைக்கைதியாகவும்,தாயில் பெரும் பாசங்கொண்டவராகவும் வெகு சிறப்பாக நடித்தார்.இதற்காக அவ் ஆண்டில்(2001)ல் தமிழ் நாட்டின் மாநில சிறந்த நடிகருக்கான விருதினையும் சுவீகரித்தார்.இதுவே சூர்யாவின் சினிமா வாழ்வின் முதல் விருது.


பிதாமகனில்விக்ரமுடன் துணை நடிகராகவும் கிட்டத்தட்ட 6 படங்களில் அதிதி நடிகனாகவும் அசத்தியிருக்கின்றார்.;கஜினி;யும் மாறுபட்ட நடிப்பிற்கு நல்ல பெயரை ஈட்டித்தந்திருக்கின்றது.கஜினிஇந்தியில் சல்மான் கானினால் நடிக்கப்பட்டது.தவிர 2008ல் வெளி வந்த வாரணம் ஆயிரம் சூர்யாவுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்தது. இப்படத்தில் 16வயது இளைஞனாகவும்,65 வயது வயோதிபராகவும் நடிக்க வேண்டியிருந்தது. உடலை வருத்தி எடையினை குறைத்து மரண விளிம்பிலிருக்கும் ஒரு நோயாளியாக பரிதாபமாக தோன்றி அனைவரையும் அசத்தி இறுதியில் மரணத்தையும் தழுவுகின்றார்.7ம் அறிவிற்காக வியட்னாமிலே குங்பூ, கராத்தே ஆகிய கலைகளை பயின்று திரையிலே டொங்லீயுடன் மோதி ஜெயிக்கும் இறுதிக் கிளைமக்ஸ் சுப்பர். 


"கஜினி","7ம் அறிவு", "ரத்தசரித்திரம்", "சிங்கம்", "ஆதவன்", "அயன்", "வாரணம் ஆயிரம்", "வேல்" எனப்பல ரசிகர் மனதிலே நீங்காதவை.தற்போது பிதாமகன் இந்தியில் திரைப்படமாக்கப்படவுள்ளது. சூர்யாவின்மாற்றான்சிங்கம்- என்பன விரைவாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.


சொந்தமாக ஸ்டூடியோ கிறீன் மூலம் சில திரப்படங்களையும், தம்பி கார்த்தியின் திரைப்படங்களையும் விநயோகித்தார். கார்த்தியின் “சகுனிஸ்டூடியோ கிறீன்” மூலமே வெளியாகியது குறிப்பிடத்தக்கது.


சாதனை விருதுகள்!


சூர்யா இதுவரை தமிழ்நாட்டரசின் மாநில விருதுகள்-3, பிலிம் பெயார் விருதுகள்-6, விஜய் டீ.வி விருதுகள்-5, சவுத் ஸ்கோப்(ICON) விருது-1, ஸ்டார் ஸ்கிரீன் (ஹிந்தி) விருது-1 , ஸ்டார் டஸ்ட் விருது-1 என மொத்தமாக 17 பிரமாண்டமான விருதுகளினை வென்றுள்ளார்.


நாட்டு மக்களிடயெ நல்ல ஒரு பிரஜை ஆகவும் சிறந்த சமூக சேவகனாகவும் வலம் வரும் இவர் தனது மக்களுக்காக 'அகரம்' தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து பல சேவைகளை செய்து வருகிறார்.


இப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த நடிகரை அவரின் ரசிகர்கள் சார்பாக எமது 
இணையத்தளம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் உவகை அடைகிறது..!!

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi

Artikel பெண்களின் கனவு நாயகன் சூர்யாவின் பிறந்த நாள்! ini dipublish oleh NEW STAR pada hari . Semoga artikel ini dapat bermanfaat.Terimakasih atas kunjungan Anda silahkan tinggalkan komentar.sudah ada 0 komentar: di postingan பெண்களின் கனவு நாயகன் சூர்யாவின் பிறந்த நாள்!