ஈழ அகதியாக வரும் அஜித்குமார்?


ஈழப் புரட்சிக்கு நிதியுதவி அளிக்கும் கேரக்டரில் அஜீத்குமார், பில்லா 2 படத்தில் நடித்திருப்பதாக ஒரு பரபரப்புச் செய்தி வெளியாகியுள்ளது.



அஜீத் நடிப்பில் ஏற்கனவே வெளியான பில்லா ரீமேக், அவருக்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது. இந்த நிலையில் தற்போது அதன் 2ம் பாகத்தை எடுத்துள்ளனர். ஆனால் இது முதல் படத்தின் தொடர்ச்சி அல்ல, மாறாக, எப்படி ஒரு சாதாரண மனிதன் பில்லா என்ற தாதாவாக மாறினான் என்பதைப் பார்க்கும் கதையாக இது மாற்றப்பட்டுள்ளது.

இப்படத்தின் கதை இதுதான் என்று ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

1983ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் ஹாலிவுட் படம் ஸ்கார்பேஸ் (Scarface). சூப்பர் ஸ்டார் அல் பசினோ நடித்த படம். அட்டகாசமாக ஓடிய திரில்லர் கிரைம் படம் இது. கதை ரொம்பச் சின்னது... கியூபாவிலிருந்து அகதியாக மியாமிக்கு வந்து சேருகிறார் அல் பசினோ.

அங்கு அவருக்கு கொகைன் கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏற்படுகிறது. பின்னர் ஒரு நாள் அந்தக் கும்பலுக்கேத் தலைவனாகி விடுகிறார் அல் பசினோ. அதன் பின்னர் அவரிடம் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இந்தப் பணத்தை அப்படியே கியூபாவுக்கு அனுப்புகிறார். அங்கு அரசுக்கு எதிரான புரட்சிக்கு பணத்தை தாராளமாக கொடுத்து உதவுகிறார்.

இந்தப் படத்துக்கு அப்போது கியூப மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக மியாமியில் வசித்து வந்த கியூப மக்கள் பெரும் போராட்டங்களிலெல்லாம் குதித்தனர். கியூப மக்களை போதைப் பொருள் கடத்தல்காரர்களாக சித்தரிப்பதா என்று வரிந்து கட்டி எழுந்தனர். ஆனால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதை விட அல் பசினோவின் அட்டகாசமான நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.

இப்போது பில்லாவுக்கு வருவோம்... ஸ்கார்பேஸ் படத்தின் கதையைத்தான் பில்லா 2 படமாக மாற்றியுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. பில்லா 2ல், இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதியாக வருகிறார் டேவிட் பில்லா, அதாவது நம்ம அஜீ்த். இங்கு வந்த பிறகு அவர் சூழ்நிலை காரணமாக தாதாவாகிறார். பின்னர் தனது நாட்டில் நடக்கும் புரட்சிக்கு உதவி செய்வதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று தெரியவில்லை. இன்னும் சில நாட்கள்தானே, படத்தைப் பார்த்து விட்டுத் தெரிந்து கொண்டால் போச்சு...

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi

Artikel ஈழ அகதியாக வரும் அஜித்குமார்? ini dipublish oleh NEW STAR pada hari . Semoga artikel ini dapat bermanfaat.Terimakasih atas kunjungan Anda silahkan tinggalkan komentar.sudah ada 0 komentar: di postingan ஈழ அகதியாக வரும் அஜித்குமார்?