ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கோச்சடையான்’ படத்தின் பாடல்களை ஜப்பான் தலைநகர்
டோக்கியோவில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஈராஸ் இன்டர்நேஷனல் மற்றும் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம், ‘கோச்சடையான்’. ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், நாசர் உட்பட பலர் நடிக்கின்றனர்.
ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்குகிறார். பெர்பாமன்ஸ் கேப்சரிங் என்ற தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள இதன் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துவருகின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலத்தில் வெளியாகும்
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் சிறப்புக் காட்சிகளை லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், இந்தியாவில் நடத்த உள்ளனர்.
இதற்கிடையில் படத்துக்காக 5 லட்சம் கோச்சடையான் மொபைல் போன்களை வினியோகிக்க உள்ளனர். இந்த போனில், படத்தின் மேக்கிங், டிரைலர், பாடல்கள், பஞ்ச் டயலாக்குகள், போஸ்டர்கள் மற்றும் ரஜினியின் டிஜிட்டல் கையெழுத்து ஆகியவை இருக்கும். இதற்காக செல்போன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.