சினிமாவில் எவ்வாறு தொடர் வெற்றி அடைவது ஹரி!

பொதுவாக சினிமாவில் முதல் படம் ஜெயித்தால், அந்த வெற்றியின் கனம் தாங்காமல், மதுவிலும் அழகிய பெண்களின் மடியிலும் கவிழ்ந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த கண்டங்களில் தப்பும் மிகச் சிலர் மட்டும் தொடர் வெற்றிகளைக் கொடுத்து வருகின்றனர்.



அவர்களில் ஒருவர் ஹரி. அவர் படங்கள் மீது விமர்சனங்கள் இருந்தாலும், அவர் மீது எந்த விமர்சனமும் இருக்காது. மனிதர் பக்கா டிஸிப்ளின்!


தமிழ் என்ற படத்தில் ஆரம்பித்து, சிங்கம் வரை அடுத்தடுத்து வெற்றிப் படங்கள்தான். சறுக்கியது ஒரே ஒரு படம்... அது சேவல்.


சிங்கம் படம் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானாலும், வசூலில் பெரும் சாதனைப் படைத்தது. இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது, சிங்கம் -2 என்ற தலைப்பில்.


சூர்யா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.


பிரகாஷ்ராஜ் தவிர, `சிங்கம்' படத்தில் நடித்த அத்தனை நடிகர்-நடிகைகளும் நடிக்கிறார்கள், ஹரி இயக்குகிறார்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் ஹரி கூறுகையில், "சிங்கம் கதையின் தொடர்ச்சியாகவே 'சிங்கம்-2' படம் தயாராகிறது. சூர்யா 2 வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார். அனுஷ்கா தொழில் அதிபரின் மகளாகவும், ஹன்சிகா கல்லூரி மாணவியாகவும் நடிக்கிறார்கள். விவேக் முக்கிய வேடத்தில் வருவார்.


'சிங்கம்' படத்தில் நடித்த மனோரமாவும் இரண்டாம் பாகத்தில் பங்கு பெறுகிறார். அவர் இப்போது பூரண குணம் அடைந்து விட்டார். உடல் நலம் தேறியபின், அவர் நடிக்கும் படம் இதுதான்.


மும்பையை சேர்ந்த முகேஷ் ரிஷியும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.


தூத்துக்குடி பின்னணியில் கதை நடப்பதால், பெரும்பகுதி படப்பிடிப்பு அங்கு நடைபெற இருக்கிறது. உச்சக்கட்ட காட்சி, தென் ஆப்பிரிக்காவில் படமாக்கப்படுகிறது.


வெற்றி ரகசியம் என்ன?


சாமி, ஆறு, சிங்கம் என தொடர்ந்து வெற்றி படம் கொடுப்பது எப்படி? என்று என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள். அதற்கு என் மனைவியும் ஒரு காரணம். எனக்கும், ப்ரீதாவுக்கும் திருமணமாகி 10 வருடங்கள் ஆகிவிட்டன. மூன்று மகன்கள் இருக்கிறார்கள்.


குடும்பத்தையும், குழந்தைகளையும் ப்ரீதா கவனித்துக்கொள்வதால்தான் தொழிலில் என்னால் முழுமையாக கவனம் செலுத்த முடிகிறது. எங்க வீட்டில் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவதில் இருந்து படிப்பு சொல்லிக்கொடுப்பது வரை எல்லாமே ப்ரீதாதான்.


கதையை மனைவிதான் ஓகே பண்ணுவார்...


ஒரு கதை என் மனதில் தோன்றியதும், முதலில் என் மனைவியிடம் சொல்லி, அவங்க கருத்த கேட்பேன். அப்புறம்தான் கதை விவாதத்துக்கு போவேன்.


பொதுவாக, நான் விருந்து-வேடிக்கை என்று வெளியில் எங்கும் அலைவதில்லை. படப்பிடிப்பு முடிந்தால், நேராக வீட்டுக்கு வந்து விடுவேன். அதனால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கிறது. என்னாலும் தொழிலில் கவனமாக இருக்க முடிகிறது!,'' என்றார்.


ஹரி.. உங்க கதைதான் மசாலா.. நீங்க பக்கா 'பத்தியம்'!

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi

Artikel சினிமாவில் எவ்வாறு தொடர் வெற்றி அடைவது ஹரி! ini dipublish oleh NEW STAR pada hari . Semoga artikel ini dapat bermanfaat.Terimakasih atas kunjungan Anda silahkan tinggalkan komentar.sudah ada 0 komentar: di postingan சினிமாவில் எவ்வாறு தொடர் வெற்றி அடைவது ஹரி!