புதியவகை குத்துப்பாடலுடன் களமிறங்கும் மிஸ்கின்

இயக்குனர் மிஸ்கின், தான் இயக்கும் படங்களில் இடம் பெறும் குத்துப்பாட்டில் மஞ்சள் சேலையில் நடனமாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


 அவ்வாறு இடம் பெற்ற சித்திரம் பேசுதடி படத்தில் வாலமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...., அஞ்சாதே படத்தில் கத்தால கண்ணால.. போன்ற பாட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த வகையில் அவர் தற்போது இயக்கி வரும் முகமூடி படத்திலும், அதுமாதிரியான பாடல் இடம்பெறுமா?

என்ற கேள்விக்கு மிஸ்கின் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், முகமூடி ஒரு சூப்பர் ஹீரோ படமாகும். அதில் குத்துப் பாடலில் மஞ்சள் சேலையில் ஆடுவது கதைக்கு பொருந்தாது. இருந்தாலும் படத்தில் டாஸ்மாக் கடையில் வைத்து பிரம்மாண்டமான முறையில் ஒரு பாடலை எடுத்து இருக்கிறோம். இந்த பாடல், என்னுடைய பழைய படங்களில் உள்ள குத்துப் பாடல்கள் இல்லாத ஏக்கத்தை தீர்த்துவிடும், என்றார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 20ம் தேதி நடைபெற உள்ளது

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi

Artikel புதியவகை குத்துப்பாடலுடன் களமிறங்கும் மிஸ்கின் ini dipublish oleh NEW STAR pada hari . Semoga artikel ini dapat bermanfaat.Terimakasih atas kunjungan Anda silahkan tinggalkan komentar.sudah ada 0 komentar: di postingan புதியவகை குத்துப்பாடலுடன் களமிறங்கும் மிஸ்கின்