எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் சொதப்பிய‌ காஜல் அகர்வால்!

சரோஜா படத்தில் காஜல் அகர்வால் சில கேரக்டரில் தலைகாட்டி விட்டு போனார். தெலுங்கில் சிரஞ்சீவி மகன் ராம்சரனுடன் மகதீரா படத்தில் ஜோடி சேர்ந்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியதால் காஜல் அகர்வால் மார்க்கெட் எகிறியது. முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தார்.தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாகி விட்டார்.



கதாநாயகிகள் ஒரே நேரத்தில் ஓரிரு படங்களில் மட்டுமே நடிப்பது வழக்கம். அவற்றை முடித்த பிறகே வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பார்கள். ஆனால் காஜல்அகர்வால் ஒரே நேரத்தில் சூர்யா ஜோடியாக மாற்றான், விஜய் ஜோடியாக துப்பாக்கி இவை தவிர மேலும் இரண்டு தெலுங்கு படங்கள் என நான்கு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார்.


இதனால் மாற்றான் படத்தில் பாடல் காட்சியொன்றில் அவரால் நடிக்க முடியவில்லை. இந்த பாடல் முடிந்தால் படவேலைகள் நிறைவடைந்து விடும். இது போல் துப்பாக்கி படத்துக்கும் இரு பாடல் காட்சி பாக்கி உள்ளது. தெலுங்கு படங்களில் நடிப்பதால் அவரால் இந்த பாடல் காட்சிகளை முடித்து கொடுக்க முடியவில்லை. அவருக்காக இரு படக்குழுவினரும் காத்து இருக்கின்றனர்.


மாற்றான் பாடல் காட்சியை வெளிநாட்டில் படமாக்க இயக்குனர் கே.வி. ஆனந்த் திட்டமிட்டார். காஜல் அகர்வாலின் சொதப்பலால் அதை சென்னைக்கு மாற்றி விட்டார்.

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi