ஆறடி உயர ஓவியமாக அலட்டிக் கொள்ளாமல் திரிகிற லட்சுமிராய்க்கு ஒரே ப்ளஸ்
பாயிண்ட் மில்லி
மீட்டர் கூட தன் எடையை கூட்டவில்லை, குறைக்கவில்லை
என்பதுதான். 'எப்படிங்க இப்படியெல்லாம்' என்று சக நடிகைகளே ட்யூஷன் எடுத்துக் கொள்கிற அளவுக்கு தங்க தகடாக திரிகிறார்.இந்த தகட்டை டாலராக மாட்டிக் கொள்ளதான் திடீர் பிரியம் காட்டுகிறார்கள்
டைரக்டர்களும். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. திடீரென்று மும்பையில்
செட்டில் ஆகி, முழு பணக்காரியாக திரும்பியிருக்கும் ராய், இனிமேல்
பணத்திற்காக நடிப்பதை விட புகழுக்காக நடிப்போமே என்று
முடிவெடுத்திருப்பதுதான்.
ஹால்மார்க் இயக்குனர்களை கையோடு அழைத்துச் சென்று நட்சத்திர ஓட்டல்களில் மூக்கு முட்ட விருந்து கொடுக்கிறார் இப்போதெல்லாம். பில் லட்சுமிராய்க்கும், ஃபுல் இயக்குனர்களுக்கும். பட் இந்த டீல் ரொம்ப புடிச்சுருக்கு என்று வழியும் இயக்குனர்கள்தான் போட்டி போட்டுக் கொண்டு வாய்ப்பு தரவிருக்கிறார்கள் லட்சுமிராய்க்கு.
இது ஒருபுறம் இருக்க, அஜீத்துடன் மங்காத்தாவில் நடிச்சாச்சு. அப்படியே விஜய் கூடவும் நடிச்சிட்டா ஜென்ம சாபல்யம் அடைஞ்ச மாதிரிதான் என்று நினைத்தார் லட்சுமி. தாண்டவம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, அப்பட இயக்குனர் விஜய்யிடம் சார், நீங்க அடுத்ததா இயக்கப் போகும் இளைய தளபதி விஜய் படத்தில் எனக்கும் ஒரு ரோல் வேணும் என்றாராம்.