அசின் கற்கும் புதுவகை நடனம்!

நாடோடிகள்', "யுத்தம் செய்' உள்ளிட்ட படங்களில் நடித்த லஷ்மி ராமகிருஷ்ணன் "ஆரோகணம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராகிறார். நடிகை சரிதாவின் தங்கைவிஜி முக்கிய பாத்திரம் ஏற்க, புதுமுகங்கள் பலர் நடிக்கின்றனர். "யுத்தம் செய்' படத்துக்கு இசையமைத்த கே இசையமைக்கிறார். ""ஒரு குணசித்திர நடிகையாக இதுவரை கவனம் ஈர்தத நான் முதல் முறையாக இயக்குநராகி இருக்கிறேன். என் வாழ்வில் நான் மிக நெருக்கமாக சந்தித்த சம்பவம் ஒன்றின் பின்னணியில்தான் திரைக்கதை உருவாகியிருக்கிறது. சினிமாக்களில் நடிப்பதை தவிர்த்து வந்த விஜி, நான் அழைத்ததன் பேரில் இப்படத்தில் நடித்திருக்கிறார். ஒரு தாய் - மகன் சம்பந்தப்பட்ட கதை என்றாலும், சின்ன சின்ன கிளைக் கதைகள் திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்தும். ஆரோகணம் என்பது ஏற்றத்தை குறிக்கும்'' என்றார் லஷ்மி ராமகிருஷ்ணன்.
ஹிந்தி படங்களில் நடித்து வரும் அசின் ஏற்கனவே பாரத நாட்டியத்தை முறையாக கற்றவர். இப்போது வால்ட்ஷ் என்ற புதிய வகை நடனத்தை கற்று வருகிறார். இது விருந்து நிகழ்ச்சிகளில் ஆடப்படும் நடன வகையை சேர்ந்தது. இதில் நாட்டுப்புற ஆடல் கலையும் சேர்ந்திருக்கும். பிரத்யேக பயிற்சியாளரை கொண்டு இந்த நடனத்தை அசின் கற்று வருகிறார். ஹந்தி பட ஷூட்டிங்கின் போது அசினுடனே பயிற்சியாளரும் தினமும் வருகிறாராம். ""அசினுக்கு ஹிந்தியில் இப்போது ஏறுமுகம். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவே வால்ட்ஷ் நடனத்தை அவர் கற்று வருகிறார்'' என அசினின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாப்ட்வேர் துறை சார்ந்த ஏழு பேர் அருவிகள் நிறைந்த வனப்பகுதிக்கு சுற்றுலா செல்லுகிறார்கள். அங்கிருக்கும் அமானுஷ்ய விஷயங்களால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? என்பதை ஆக்ஷன் திரில் கலந்து சொல்ல வருகிறது "மௌனமான நேரம்'. புதுமுகங்கள் பலர் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மோகன்ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். மிஸ் மும்பை டெய்ஷா இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ""திரில்லர் படம் என்றாலே இரவு நேரங்களில் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்பதை இதில் முறியடித்துள்ளோம். இந்தப் படத்தில் 99 சதவீதம் வரை பகலிலேயே ஷூட்டிங் நடத்தியுள்ளோம். திரில்லர் படங்களில் இது வித்தியாசமாக இருக்கும்'' என்கிறார் இயக்குநர் மோகன்ராஜ்.
பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கும் "கவுரவம்' படத்திலிருந்து சரத்குமார் மகள் வரலட்சுமி விலகியுள்ளார். கவுரவ கொலைகள் பின்னணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா ஹீரோவாகவும், சரத்குமார் மகள் வரலட்சுமியும் நடிப்பதாக பேசப்பட்டது. கால்ஷீட் பிரச்னையால் நாக சைதன்யா முதலில் விலகினார். இதையடுத்து தெலுங்கு நடிகர் விரிஷ் ஒப்பந்தமானார். இதையடுத்து ஜூன் மாதத்தில் ஷூட்டிங் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வரலட்சுமியும் அப்படத்தில் இருந்து விலகியுள்ளார்.

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi

Artikel அசின் கற்கும் புதுவகை நடனம்! ini dipublish oleh NEW STAR pada hari . Semoga artikel ini dapat bermanfaat.Terimakasih atas kunjungan Anda silahkan tinggalkan komentar.sudah ada 0 komentar: di postingan அசின் கற்கும் புதுவகை நடனம்!