தமன்னா சென்னைக்கு வந்திருக்கிறார் என்பதே தலைப்பு செய்தி மாதிரி ஆகி விட்டது. என்ன ஆனது? தமிழ்
சினிமா ரொம்பவே பிடிக்கும். அதை விட இங்குள்ள ரசிகர்களைப் பிடிக்கும்.
தொடர்ந்து நல்ல சினிமாக்கள் கிடைத்தன. மாஸ் ஹீரோக்களுடன் டூயட், தமன்னா
இருந்தால் போதும் என நினைக்கிற டைரக்டர்கள்னு நல்லாவே இருந்துச்சு. ஆனால்
இப்ப நான் தமிழ் சினிமாவில் இல்லை.தெலுங்கு மற்றும் கன்னட
சினிமாக்களில் பிஸியாகி விட்டேன். இடைவிடாத கால்ஷீட், நல்ல நல்ல கதைகள்னு
ரொம்பவே பிஸியாக இருக்கேன். அதனால்தான் தமிழ் சினிமாவில் நடிக்க முடியலை.
ஆனா இந்த சினிமாவையும், ரசிகர்களையும் விட மனசில்லை. அதற்காகத்தான்
இப்ப சென்னை வந்திருக்கேன். நாலு டைரக்டர்ஸ் கதை சொல்லியிருக்காங்க.
""நீங்கதான் இந்த கதைக்கு வேணும். கால்ஷீட் இல்லைன்னு சொல்லிடாதீங்க''ன்னு
கேட்டாங்க. ""சீக்கிரமே சொல்றேன்''னு சொல்லியிருக்கேன். தெலுங்கில் ஒரு
படம் முடிவடையற நிலைல இருக்கு. அது முடிஞ்சதும் தமிழ் சினிமாவில்
நடிக்கலாம்ன்னு இருக்கேன். பார்ப்போம். என்னதான் மற்ற மொழிகள்ல நல்ல படங்கள் கிடைத்தாலும், கோலிவுட் சினிமாவின் மார்க்கெட்டே தனிதானே? கரெக்ட்.
இங்குள்ள மாதிரி எங்கேயும் இப்ப சினிமா இல்லை. இந்திய சினிமாக்களில்
மராட்டியம், பெங்காலி அதன் பின் தமிழ் சினிமாதான் கவனிக்கப்படுது. அதுக்கு
இங்கு நடக்கிற மாற்றங்களை ஏத்துக்கிற ரசிகர்கள்தான் முக்கிய காரணம். தமிழ்
சினிமாவில் நான் நடிக்காத போது நிறைய பேர் போன் பண்ணினாங்க. நிறைய மெயில்
வந்துச்சு. நீங்க கண்டிப்பா தமிழ் சினிமாவுக்கு வரணும்னு
நிறைய சினிமாக்காரங்களே ஆசைப்பட்டாங்க. எனக்கு தமிழ் சினிமா பிடிக்கும்.
அதில் நடிப்பதும் பிடிக்கும், ஆனா என்னவோ தெரியலை. தெலுங்கு சினிமாவை
விட்டு வெளியே வர முடியலை. ஆனா தமிழுக்கு வருவதற்கு இப்ப நேரம்
வந்திருக்கு. இந்த டிசம்பருக்குள் இரண்டு படங்களில் நடிக்க வேண்டும் என
முடிவு செஞ்சிருக்கேன். அதுக்கான சூழ்நிலைகள் சீக்கிரமே கை கூடும்னும்
நினைக்கிறேன். உங்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகளையெல்லாம் ஹன்சிகாதான் தட்டி பறிக்கிறாங்களாமே?யார்
சொன்னது? ஹன்சிகா நல்ல பொண்ணு. சினிமாவில் எனக்கு சீனியர். சின்ன வயசிலிலே
நடிக்க வந்துட்டாங்க. அவங்களுக்கு சினிமா பத்தி நிறைய தெரியும். என்னிடம்
நிறைய தடவை பேசினாங்க. நானும் அப்பப்போ பேசி வாழ்த்துகளை பரிமாறிப்பேன்.
இப்ப "ஒரு கல் ஒரு கண்ணாடி' நல்லா ஓடுதாமே. காரில் வரும் போது வடபழனி
ரோட்டுல போஸ்டர்ஸ் பார்த்தேன். நல்லாயிருந்துச்சு. அப்போதே
போன் பண்ணி ""போஸ்டர் நல்லாயிருக்குது''ன்னு சொன்னேன். ""நானும்
சென்னையில்தான் இருக்கேன். வந்து பார்க்குறேன்''னு சொன்னாங்க. ஹன்சிகா
எப்பவுமே எனக்கு நல்ல ஃப்ரெண்ட்.பெர்சனலா ஒரு கேள்வி... ஒரு நடிகருடன் ஏற்பட்ட காதல் தோல்வியால்தான் தமன்னா தமிழ் சினிமாவை விட்டு போயிட்டாங்கன்னு பேசிக்கிறாங்களே?சினிமா
நடிகைகளை பத்தி எப்பவுமே ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே கற்பனை
இருக்கும். அது தவிர்க்க முடியாத ஒன்றுதான். இதுக்காக கவலைப்பட்டு,
கண்ணீர் சிந்திக்கிட்டு இருக்க முடியாது. நான் இன்னும்
காதலிக்கவே ஆரம்பிக்கல. அதுக்குள்ள தோல்வியா? இப்பதான் டீன் ஏஜை
தாண்டியிருக்கேன். அதுக்குள்ள நான் ஏன் காதலிக்கணும். அப்படியே
காதலிச்சாலும் அதை நான் ஏன் தோல்வியா சந்திக்கணும். இந்த
விஷயம் அப்பப்ப என் காதுக்கும் வரும். சரியான சந்தர்ப்பத்தில் இந்த
விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்னு நினைச்சேன். இப்ப வைக்கிறேன்.
எனக்கு காதலும் இல்லை. தோல்வியும் இல்லை. நான் எப்போதும் போலவே
இருக்கிறேன். தமிழ் சினிமாவில் நிறைய வெரைட்டி கேரக்டர்ஸ்
பண்ணியாச்சு. அதே போல் தெலுங்கு சினிமாவிலும் கொஞ்சம் பண்ணலாம்னுதான்
போயிருந்தேன். இப்ப மறுபடியும் தமிழுக்கு வந்திருக்கேன். இதுதான் உண்மை.காதல் தப்புன்னு யாராவது சொல்லுவாங்களா? ரகசியமா சொல்லுங்க. யாரைக் காதலிக்கிறீங்க?அதுக்குள்ளே
என்ன அவசரம்? சினிமாவில் நான் எதிர்பார்க்காத இடம் இது. சரியான
திட்டமிடலுடன் இந்த இடத்தை பிடிச்சிருக்கேன். இதுல இன்னும் சாதிக்கணும்.
அதன் பின்தான் காதல், கல்யாணம் எல்லாம். இந்த பதிலை நான் நிறைய தடவை
சொல்லிட்டேன். நீங்களும் நிறைய தடவை கேட்டுக்கிட்டே இருக்கீங்க. நீங்க
தினமும் பார்க்குற, பேசுற சக மனுஷிதான் நான். அதனால் எனக்கும் காதல்
வரும். அப்ப அதை பத்தி பேசலாம். இப்ப வேண்டாம்.சரி, உங்க ட்ரீம் பாய் எப்படி இருக்கணும்னு சொல்லுங்க. புரிஞ்சிக்குறோம்?எனக்கு
அமெரிக்க நடிகர் ப்ராட்லி கூப்பர்ன்னா அவ்வளவு பிடிக்கும். சினிமா,
டி.வி.ன்னு கலக்கிட்டு இருக்குற ஹேண்ட்சம் ஹீரோ. அவருக்கு எப்பவோ கல்யாணம்
ஆகிடுச்சு. அவர் இப்ப போன் பண்ணி ஓ.கே.சொன்னாலும், உடனே தமன்னா
அமெரிக்காவுக்கு எஸ்கேப். நம்ம ஊர்ல கிரிக்கெட்டர் வீராட் கோலியை
பிடிச்சிருக்கு. பார்க்கலாம் யாருக்கு லக் இருக்குன்னு.தமிழில்
நல்ல சினிமாக்களை தேடி பிடித்து நடிச்சீங்க. ஆனா தெலுங்கில் "ரகளை'
மாதிரியான கமர்ஷியல் படத்துக்குதானே முக்கியத்துவம் தர்றீங்க?இந்த
கொஸ்டீன் எனக்குப் பிடிச்சிருக்கு. தமிழ் சினிமாவின் டிரெண்ட் வேறு.
தெலுங்கு சினிமாவின் டிரெண்ட் வேறு. தெலுங்கு சினிமாக்களில் இன்னும்
கமர்ஷியல் படங்களுக்கு வேல்யூ இருக்கு. ஆனா தமிழ் சினிமாவில் அது மாதிரி
இல்லை. வழக்கமான ஹீரோயிஸத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள
மறுக்கிறார்கள் என்பது நான் உணர்ந்த விஷயம். அதனால் நிறைய
ஹீரோக்கள் இங்கே ரூட் மாறிட்டாங்க. ஆனா தெலுங்கில் அது மாதிரி
படங்களைத்தான் ரசிகர்கள் விரும்புறாங்க. அதனால் ஹீரோக்கள் அதை விட்டு விலக
முடியலை. "ரகளை' படம் பார்த்த நிறைய பேர் என்னிடம் பேசினாங்க. தமிழில்
இப்படிப்பட்ட படங்களே இப்ப வர்றதில்லைன்னு சொன்னாங்க. அது நிஜம்தான்...கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆகி விட்டது. ஆனால் தமிழ் சினிமாவை நிறைய ஹீரோயின்கள் ஆக்கிரமிச்சுட்டாங்களே?ஆளாளுக்கு
ஒரு மார்க்கெட் இருக்கு. அதை யாராலும் அழிக்க முடியாது. தமன்னாவுக்குன்னு
ஒரு இடம் இருக்கு. எனக்கு எது கிடைக்குமோ அது கிடைத்தே தீரும். என் படம்
ரிலீசாகும் போது, அது உங்களுக்கு தெரியவரும். மற்றபடி இங்கே இருக்குற
எல்லோரும் எனக்கு ப்ரெண்ட்ஸ்தான் ஹன்சிகா, அமலாபால், காஜல், சமந்தான்னு
பெரிய லிஸ்ட்டே இருக்கு. சென்னைக்கு வரும் போதெல்லாம்
பார்ட்டி, டான்ஸ்னு அவங்களோடு ஜாலியா இருப்பேன். அப்ப சினிமா பத்தி யாரும்
பேச மாட்டோம். ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும்தான் எங்களுக்குள் போட்டி
இருக்கும். வேறு எங்கேயும் இருக்காது.முகப் பொலிவு, கூந்தல் மினுமினுப்பு... ரகசியம் சொல்லுங்களேன்?எனக்கு
இயல்பாகவே ஸ்மைலி ஃபேஸ். மத்தபடி எல்லா வயசுலேயும் நம்ம முகத்தை ஒரே
மாதிரி வெச்சுக்க முடியாது. அப்படி வெச்சுக்க நினைச்சு நாம தடவுற கண்ட
கண்ட க்ரீம்கள்தான் முகத்தை பாழாக்கும். இயற்கைக்கு எதிரான எந்த விஷயமும்
அப்போதைக்கு அழகாக தெரியுமே தவிர, நிலைச்சு நிற்காது. சொன்னா நம்ம
மாட்டீங்க. முகத்துக்கு நல்ல தண்ணீரை மட்டுமே பயன்படுத்துறேன். அடிக்கடி
முகம் கழுவுவேன். நிறைய தண்ணீர் குடிப்பேன். வாரத்துக்கு ஒரு முறை தலைக்கு
மசாஜ் பண்ணுவேன். சின்ன வயசிலேருந்து பயன்படுத்துற ஹேர் ஆயிலை மட்டுமேதான்
பயன்படுத்துறேன். ஓகே.. ஹைதராபாத் பிளைட்டுக்கு டைம் ஆச்சு.. அடுத்த
மீட்டிங்ல நிறைய பேசுவோம்.. பை..