சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் கோச்சடையான்.
இத்திரைப்படத்தின் இயக்குனர் அவருடைய மகள் செளந்தர்யா. அத்தோடு இத்திரைப்படம் சாதாரண மற்றைய படங்கள் போல் இல்லாமல் கம்பியூட்டர் தொழில்நுட்பத்தில் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோச்சடையான் படம் முடிந்ததும் ரஜினி அடுத்து நடிக்கவிருப்பது ராணாதான் என பலரும் சொல்லிக் கொண்டிருக்க, கடந்த சில தினங்களாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.
கே வி ஆனந்த் இயக்கத்தில் அவர் நடிக்க சம்மதித்திருப்பதாகவும், இதற்காக ஆனந்தை அவர் இருமுறை தன் அலுவலகத்துக்கு வரவழைத்து ஆலோசனை செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கே.வி.ஆனந்தைச் சந்தித்த ரஜினி, கோச்சடையான் முடியும் வரை எதையும் வெளிப்படுத்த வேண்டாம். சூழலைப் பொறுத்து சொல்லிக் கொள்ளலாம் என ரஜினி சொன்னதாகவும், ஆனால் தகவல் அறிந்த சிலர் விஷயத்தை கசியவிட்டதால், மீடியாவில் பரபரப்பாகிவிட்டதாகவும் கூறுகிறார்கள்.
கே.வி.ஆனந்தும் அவரது ஆஸ்தான எழுத்தாளர்கள் சுபாவும் இணைந்து ரஜினிக்கென ஒரு அதிரடி கதையை தயார் செய்து வருகிறார்களாம்.
ரஜினி – கே.வி.ஆனந்த் கூட்டணித் தகவலை கேள்விப்பட்ட ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தினை எப்படியாவது தங்களது நிறுவனத்தின் மூலம் தயாரிக்க வேண்டும் என்ற முனைப்பு காட்டி வருகிறது.
இன்னொரு பக்கம், ஆஸ்கர் ரவிச்சந்திரனும் இந்தப் படத்தை தனது பேனரில் செய்யுமாறு ஆனந்தை கேட்டு வருகிறாராம்.