விஷால் உடன் எம்.ஜி.ஆர்., படத்தில் ஜோடி சேர இருந்த கார்த்திகா,
இப்போது அப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமர் படத்திற்கு பிறகு
நடிகர் விஷால் அடுத்து சுந்தர்.சி இயக்கும் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு மதன கஜா ராஜா என்பதனை சுருக்கி எம்.ஜி.ஆர் என்று பெயர் வைத்துள்ளனர். விஷால் முதன்முறையாக இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார். படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கோ பட நாயகி கார்த்திகா நடிக்க ஒப்பந்தமானார். படத்தின் டெஸ்ட் சூட்டிலும் கார்த்திகா பங்கேற்றுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இருந்து அவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் டெஸ்ட் சூட்டிற்கு முன்பு அவருக்கு சொல்லப்பட்ட கதையை இப்போது சுந்தர்.சி மாற்றிவிட்டதாகவும், மேலும் படத்தில் கார்த்திகாவுடன் இன்னொரு ஹீரோயினும் நடிக்க இருப்பதாகவும், அதனால் கார்த்திகாவுக்கான ரோல் முக்கியத்துவம் இல்லாமல் போகும் என்பதாலும் இப்படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதேசமயம் கார்த்திகாவை இப்படத்தில் நடிக்க வைக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருவதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.