புதுமுகம்
குமார் நாகேந்திரா இயக்கத்தில் ஆதி, டாப்சி, நடிகர் மோகன் பாபுவின் மகள்
லட்சுமி மஞ்சு, சுதீப் கிஷன் ஆகியோர் நடித்து வரும் புதிய படம் "மறந்தேன்
மன்னித்தேன்'. இப்படத்தின் சூட்டிங் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்று
பகுதியில் நடந்து வருகிறது. வெள்ளத்தில் குடிசைகள்
உள்ளிட்டவைகள் அடித்து செல்வது போன்ற காட்சியை படமாக்க திட்டமிட்டு
இருந்தார் இயக்குநர். இதற்காக கோதாவரி ஆற்று பகுதியில் சுமார் 21 ஏக்கர்
பரப்பளவில் 170 குடிசைகள் போன்று செட் அமைக்கப்பட்டு இருந்தது.
இக்காட்சியை எடுக்க அணையை சிறிது நேரம் திறக்க சிறப்பு அனுமதி பெற்று, சுமார் 20 கேமராக்கள் இந்தக் காட்சியைப் படமாக்க அனைவரும் காத்திருந்தனர். அப்போது 6 மதகுகள் வழியாக சீறிப் பாய்ந்த தண்ணீர் ஆதியையும், லட்சுமி மஞ்சுவையும் வெள்ளத்தில் அடித்துச் சென்றது. கிட்டத்தட்ட 400 அடி தூரத்துக்கு இவர்கள் இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அருகில் இருந்த மீனவர்கள் விரைந்து சென்று இருவரையும் மீட்டு கரை சேர்த்திருக்கிறார்கள்.