எஸ்.ஜே.சூர்யா இசையில் விஷ்ணுவர்த்தன்!

தனது இசை படத்தின் படப்பிடிப்பை சத்தமில்லாமல்
நடத்திக் கொண்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. தமிழ் திரையுலகில் உழைப்பாலும் திறமையாலும் இசையமைப்பாளராக உயரும் இளைஞனை பற்றிய கதையிது.


இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் இசையமைப்பாளர் பணியையும் ஏற்றுக் கொண்டுள்ளார் சூர்யா. சாவித்ரி என்ற புதுமுகம் ஹீரோயின். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதில் கெஸ்ட் ரோலில் இயக்குனர் விஷ்ணுவர்தன் நடிக்கிறார்.


அஜித் நடிக்கும் பெயரிடப்படாதப் படத்தின் படப்பிடிப்பில் தற்போது விஷ்ணுவர்தன் பிஸியாக இருக்கிறார். மும்பையில் படப்பிடிப்பு நடக்கிறது. கிடைக்கிற இடைவெளியில் சூர்யா படத்தில் நடிக்க விஷ்ணுவர்தன் நடித்துத்தர ஒப்புக் கொண்டிருக்கிறாராம். இசை திரையுலகைப் பற்றிய படம் என்பதால் விஷ்ணுவர்தன் இயக்குனர் விஷ்ணுவர்தனாகவே இசையில் வருகிறார்.


மேலும் சில இயக்குனர்களும் இசையில் நடிப்பார்கள் என தெ&zwnj;ரிகிறது.<

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi

Artikel எஸ்.ஜே.சூர்யா இசையில் விஷ்ணுவர்த்தன்! ini dipublish oleh NEW STAR pada hari . Semoga artikel ini dapat bermanfaat.Terimakasih atas kunjungan Anda silahkan tinggalkan komentar.sudah ada 0 komentar: di postingan எஸ்.ஜே.சூர்யா இசையில் விஷ்ணுவர்த்தன்!