அழகி' மோனிகா நடிப்பில் '916' என்ற படம் வர இருக்கிறது. தங்கத்திற்கு இந்த
எண்ணைத்தான் ஹால்மார்க் குறியீடாக வைத்திருக்கிறார்கள்.மலையாளப்படங்களில் நடித்து வரும் மோனிகா, 'வர்ணம்' படத்திற்கு பிறகு தமிழில் தலைகாட்டுவது இல்லை என்ற பேச்சு கோலிவுட்டில் இருக்கிறது.
இந்நிலையில் நடிகை மோனிகாவை ஒருவிழாவில் சந்தித்தோம். அப்போது எடுக்கப்பட்ட மினி பேட்டி இதோ
'வர்ணம்' படத்திற்குப் பிறகு எங்கே போயிட்டீங்க..?
எங்கேயும் போகலைங்க... குறும்புக்காரப் பசங்க படம் விரைவில் வெளிவர இருக்கிறது..!"
சென்னையில் உங்களைப் பார்க்க முடிவதில்லையே..?
"மலேசியா, துபாய் ,அபுதாபி ,மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்று பயணித்துக் கொண்டிருக்கிறேன்., அதனால்தான் சென்னையில் என்னைப் பார்க்க முடிவதில்லை. மலேசியத் தமிழ்ப்படமான 'திட்டம்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
ராதாரவி சார் போன்று பெரிய நடிகர்கள் நடிக்கும் 'திட்டம்' படம் முழுக்க முழுக்க மலேசியத் தொழில் நுட்பக்கலைஞர்கள் பணியாற்ற வளர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் அழைப்புகளை ஏற்று மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சில வளைகுடா நாடுகளில் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடத்திக் கொண்டிருக்கிறேன்.''
மலையாளப்படங்களுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறீர்களாமே..?
அப்படி எல்லாம் ஏதுமில்லை. தமிழ் மொழி படங்கள்தான் எனக்கு முக்கியம். மலையாளத்தில் இருந்து அழைப்பு வந்தாதல் அங்கு நடிக்கிறேன். தற்போது 'குசேலன்' படத்தின் மூலப் படமான 'கதை பரையும்போல்' படத்தை இயக்கிய இயக்குனர் எம்.மோகனன் இயக்கத்தில் '916' என்று ஒரு படத்தில் நடிக்கிறேன். இந்த வருடத்திலேயே இந்த மூன்று படங்களும் வெளியாகவிருக்கின்றன..அது என்ன 916, நீங்கதான் அதில் சொக்கத் தங்கமா..?
கலகலவென சிரித்துவிட்டு...) படம் வரும் வரை காத்திருங்கள்.