சினிமாவில் அஜித் நுழைந்தபோது எப்படி இருந்தாரோ, அதேப்போல இப்போதும் மாறாமல், பெரிய நடிகர் என்ற பந்தாவும் இல்லாமல் இருக்கிறார் என்று பில்லா-2 ஒளிப்பதிவாளர் ராஜசேகர் கூறியுள்ளார். அஜித், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா உள்ளிட்ட பலரது நடிப்பில், சக்ரி டோல்டி இயக்கத்தில், ஒய்டு ஆங்கிள் மற்றும் ஐ.என்.இ இணைந்து தயாரித்து பிரமாண்டமாய் உருவாகி இருக்கும் படம் பில்லா-2. இப்படம் ஜூலை 13ம் தேதி முதல் உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருக்கிறது
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதன்பின்னர் தினமலருக்கு பேட்டியளித்த இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜசேகர் கூறியதாவது, பில்லா-2 படத்தில் ஒளிப்பதிவு செய்தது ரொம்ப சவாலாக இருந்தது. எல்லா மனிதனும் கொள்ளைக்காரனாக பிறப்பதில்லை. அதுபோலத்தான் பில்லா-2விலும் அஜித் சாதாரண மனிதனாக இருந்தவர் எப்படி பில்லாவாக மாற்றப்பட்டார். அதற்கான சூழ்நிலை அமைந்தது எப்படி என்பதே இப்படத்தின் மையக்கரு. அதை ரொம்ப அழகாகவும், அருமையாகவும் படமாக்கியுள்ளோம்.
ஆசியாவிலேயே முதன்முறையாக இந்தபடத்தில் தான் எபிக் எனும் 5கே ‌ரெசல்யூசன் காமிராவை பயன்படுத்தியுள்ளோம். இதற்காக தென் ஆப்ரிக்காவில் இருந்த பிரத்‌யேகமான லென்ஸ் வரவழைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. பில்லா-2வின் பெரும்பகுதியை ஐதரபாத், கோவா,மும்பை மற்றும் ஜார்ஜியாவில் படமாக்கினோம். அதிலும் ஜார்ஜியாவில் மைனஸ் 10 டிகிரி குளிரில் படம் பிடித்தது ரொம்ப சவாலாக அமைந்தது.
பில்லா-2வில் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் ஒரு நல்ல அனுபவம். சினிமாவிற்கு வந்தபோது அவர் எப்படி இருந்தாரோ அதுபோல இப்பவும் இருக்கிறார். கதைக்கு எது தேவை, எப்படி நடிக்க வேண்டும், எந்தமாதிரி டிரஸ் போடவேண்டும் என்று படக்குழுவில் யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொண்டு நடிப்பவர். ஒரு பெரிய ஹீரோ என்ற பந்தாவே அவரிடம் கிடையாது என்று கூறியுள்ளார்.