அஜித்தின் பில்லா 2 வசூல் விபரம்!

பில்லா 2 நல்லாயில்லை என்று அவரது ரசிகர்களில் ஒருசாரார் ஒத்துக் கொள்கிறார்கள். வசூலைப் பார்த்தால் இதுதான் இந்த வருடத்தின் டாப் என்று சொல்லலாம். அவசரப்படாதீர்கள், நாம் சொல்வது ஓபனிங் வசூல்.



பில்லா 2 முதல் நாள் தமிழகமெங்கும் ஹவுஸ்ஃபுல். வரி போக முதல் நாள் மட்டும் வசூல் ஏறக்குறைய 7.6 கோடிகள் வசூலித்திருக்கிறது. அஜீத் படமொன்று இவ்வளவு அதிக தொகையை முதல் நாள் வசூலித்திருப்பது இதுதான் முதல்முறை. வெளிநாடுகளில் முதல்நாள் வசூல் 2 கோடிகள். இதுவொரு சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.


முதலிரண்டு நாட்களில் யுகே-யில் 48 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவே யுஎஸ்ஸில் 57 லட்சங்கள். ஆஸ்திரேலியாவில் 22 லட்சங்கள். ஆஸ்திரேலியாவில் இந்திப் படங்களே இந்த அளவுக்குதான் வசூல் செய்கின்றன.


இதெல்லாம் முதல் மற்றும் முதலிரண்டு நாட்களுக்கான வசூல். மூன்றாம் நாள் ஞாயிறு என்பதால் அதுவும் பல்க்காகவே இருக்கும் ஆனால் வார நாட்களில்? திங்கட்கிழமையே சென்னையில் சில திரையரங்குகளில் கூட்டமில்லை. நஷ்டத்தை சந்திக்காமல் இருந்தால் அதுவே பெரிய வெற்றிதான்.

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi

Artikel அஜித்தின் பில்லா 2 வசூல் விபரம்! ini dipublish oleh NEW STAR pada hari . Semoga artikel ini dapat bermanfaat.Terimakasih atas kunjungan Anda silahkan tinggalkan komentar.sudah ada 0 komentar: di postingan அஜித்தின் பில்லா 2 வசூல் விபரம்!