துப்பாக்கி தடயை நீக்க கோரிக்கை மனு தாக்கல் கலைபுலிதாணு!

நடிகர் விஜய் நடிக்கும்துப்பாக்கி படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கக் கோரி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மனு தாக்கல் செய்துள்ளார். விருகம்பாக்கத்தை சேர்ந்த நார்த் ஈஸ்ட் பிலிம் ஒர்க்ஸ் பேக்டரி உரிமையாளர் சி.ரவி என்ற கே.சி. ரவிதேவன் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கடந்த 2009ம் ஆண்டு கள்ளத்துப்பாக்கி என்ற பெயரை தென்னிந்திய பிலிம்சேம்பரில் பதிவு செய்தேன்.



இந்நிலையில், துப்பாக்கி என்ற பெயரில் கலைப்புலி தாணு, திரைப்படம் தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு துப்பாக்கி என்று பெயர் சூட்டியுள்ளனர். அந்த படத்துக்கு துப்பாக்கி என்ற பெயரையும், துப்பாக்கி லோகோவையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்� என்று கூறியுள்ளார். இதை விசாரித்த 2வது சிட்டி சிவில் நீதிமன்றம் துப்பாக்கி என்ற பெயரைப் பயன்படுத்த கலைப்புலி தாணுவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.


இதையடுத்து, இந்த தடையை நீக்கக் கோரி கலைப்புலி தாணு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனு: துப்பாக்கிக்கும், கள்ளத்துப்பாக்கிக்கும் வேறுபாடு உள்ளது. துப்பாக்கி என்ற பொதுவான பொருளின் படத்துக்கு (லோகோ) யாரும் உரிமை கொண்டாட முடியாது. 


ஆதி என்ற பெயரில் திரைப்படம் எடுத்தபின்னர் ஆதி சிவன், ஆதிவாசி என்ற வேறு பெயர்களிலும், சிங்கம் என்ற பெயர் சிங்கம்புலி, சிங்கமுகம், சிங்கமகன் என்ற வேறு பெயர்களிலும், ஈ என்ற பெயர் நான் ஈ, நெருப்பு ஈ என்ற வேறு பெயர்களிலும் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.


துப்பாக்கி என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தனிப்பட்ட எவரும் உரிமை கோர முடியாது. எனவே தடையை நீக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு 2வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi